ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், இந்தியா சாதனை அளவாக ஏழாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
சிலானந்த் லக்ரா (4வது மற்றும் 13வது நிமிடங்கள்), தில்பிரீத் சிங் (21வது மற்றும் 25வது நிமிடங்கள்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (9வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (21வது நிமிடம்), அங்கத் பிர் சிங் (36வது நிமிடம்) மற்றும் விவேக் சாகர் பிரசாத் (54வது நிமிடம்) ஆகியோர் இந்தியாவுக்காக கோல் அடித்தனர். தென் கொரியாவுக்காக சங்ஜுன் ஹான் (9வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
வியாழக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்ளும். முன்னதாக இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்த நிலையில், ஷூட் அவுட்டில் ஜப்பான் மலேசியாவை வீழ்த்தியது.
ராபிட் சுற்றின் கடைசி கட்டத்திலும் இந்தியா தென் கொரியாவை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
போட்டியை நடத்தும் அணி இதுவரை இத்தொடரில் தோல்வியடையாமல் உள்ளது. அவர்கள் தங்களது ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஆறு அணிகள் கொண்ட லீக் சுற்றில் முதலிடம் பிடித்திருந்தனர்.