ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இறுதி முடிவை பார்க்கும்போது இது இந்தியாவிற்கு எளிதான வெற்றியாக தோன்றினாலும், குறிப்பாக முதல் பாதியில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியாகவும் இருந்தது.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே மட்சுமோட்டோ கோல் அடிக்க, ஜப்பான் அணி முன்னிலை பெற்றது. முதல் பாதியில் ஜப்பான் அணி வலுவாக செயல்பட்டு, கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டதால், இந்திய அணி கடும் அழுத்தத்திற்கு உள்ளானது.
இருப்பினும், இரண்டாவது பாதியில் இந்திய அணி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 42-ஆவது நிமிடத்தில் ஷிலானந்த் லக்ரா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதனை தொடர்ந்து, 48-ஆவது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் கோல் அடிக்க, இந்தியா முன்னிலை பெற்றது.
பின்னர், 53-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடிக்க, இந்தியாவின் முன்னிலை அதிகரித்தது. அடுத்த ஒரு நிமிடத்திலேயே சுக்ப்ரீத் சிங் நான்காவது கோலை அடித்தார். இதன் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா ஆறாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா, ஜப்பானை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஜப்பான் அணி, அரையிறுதியில் மலேசியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு வந்திருந்தது.
இறுதிப் போட்டியை வலுவாக தொடங்கிய ஜப்பான், மூன்றாவது நிமிடத்திலேயே மட்சுமோட்டோ மூலம் முன்னிலை பெற்றது. மறுபுறம், முதல் பாதியில் இந்திய அணி தனது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறியது; ஜப்பான் அணி இந்தியாவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 42-ஆவது நிமிடத்தில் இந்தியா திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்தியா தனது பயணத்தை வங்கதேசத்திற்கு எதிரான 13-0 என்ற பிரம்மாண்ட வெற்றியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, சீனாவுக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, தொடரை நடத்தும் நாடான அந்த அணி, லீக் சுற்றில் ஜப்பானை 4-1 என்ற கணக்கிலும், மலேசியாவை 4-2 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 8-0 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.