விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

இரண்டு பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்றும் வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், சாண்டா 60 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சீனா 50 தங்கம், 20 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம் 80 பதக்கங்களை பெற்று தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்திய வீரர்கள் சாதனை

இந்த நிலையில் இன்று (24.09.2026) நடைபெற்ற மகளிர் சாண்டா (தற்காப்பு கலை) 60 கிலோ பிரிவில் நெளரெம் ரோஷிபினா தேவி கலந்துகொண்டார்.

இந்த இறுதி போட்டியில் சீனாவின் ஜாங் சியாயு என்பவரை எதிர்த்து தேவி விளையாடினார்.

அப்போது சீன வீராங்கனையிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

முன்னதாக நடந்த ஆடவர் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் சத்னம் சிங் மற்றும் சல்மான் கான் கலந்துகொண்டனர்.

இவர்கள் துடுப்பு படகு போட்டியில், 6:13:25 நிமிடங்களில் இலக்கை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றனர்.

தரவரிசை பட்டியல்

இந்த இரண்டு பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலத்துடன் மொத்தம் 14 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இதன்மூலம் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து 13வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT