விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு: பதக்க பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்46 பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கமும் கிடைத்தது.

ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா 62 பதக்கங்களைப் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறியது.

ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இரண்டாம் நாள் முடிவில் இந்​தி​யா 9 தங்​கம்​, 11 வெள்ளி, 15 வெண்​கலம்​ என மொத்தம் 35 பதக்​கங்​களை வென்​று பட்டியலில் 6-வது இடத்தில் இருந்தது.

27 பதக்கம் வென்ற இந்தியா

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்றும் இந்தியா பதக்க வேட்டையை அதிகரித்தது. இன்று 5 தங்கம், 11 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று அசத்தியது.

தடகளத்தில் 13 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் என 42 பதக்கம் கிடைத்துள்ளது.

நீச்சலில் 2 வெள்ளி, 4 வெண்கலமும், டேபிள் டென்னிசில் 5 வெண்கலமும், துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலமும், ஜூடோவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும், பளு தூக்குதலில் 2 வெள்ளியும், வில்வித்தையில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

பதக்க பட்டியலில் 5வது இடம்

இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டின் பதக்கப் பட்டியலில் இந்திய அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி 14 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப் 46 பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT