சர்வதேச பூமி அறிவியல் ஒலிம்பியாட்: இந்தியா சாதனை
இத்தாலியின் டொரினோவில் நடைபெற்ற 19-வது சர்வதேச பூமி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2026) போட்டியில் இந்திய மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா சார்பில் 4 மாணவர்கள் பங்கேற்பு
சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) போட்டியில் இந்தியா சார்பில் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பள்ளி மாணவர்கள் இத்தாலியின் டொரினோ நகரில் ஆகஸ்ட் 20 முதல் 27 வரை நடைபெற்ற இப்போட்டியின் 19 வது பதிப்பில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பதக்கம் வென்ற மாணவர்களின் விவரம்
இந்தியா சார்பில் செளமிக் மண்டல், ஆரோன் மைதி, ரித்தி ரஞ்சன், முகமது ஏத்தேஷம் ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, மாணவர் சௌமிக் மண்டல் இந்த ஒலிம்பியாட்டின் 19ம் ஆண்டு வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் தரவரிசையைப் (Individual Rank) பெற்று சிறப்பு சாதனையை புரிந்துள்ளார்.
IESO போட்டி என்பது என்ன
IESO என்பது 18 வயதுக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு வருடாந்திர போட்டியாகும். குறிப்பாக இந்த போட்டியானது கோட்பாடு மற்றும் செய்முறைத் தேர்வுகள் மூலம் புவியியல். புவி இயற்பியல், வானிலை ஆய்வு. கடலியல், புவி வானியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களின் அடிப்படையில் பங்கேற்பாளார்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு பரிசோதனை செய்யும் முறையாகும்.
IESO போட்டியில் இந்தியாவின் பங்கு
2007-ல் தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற முதல் IESO போட்டியில், இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. பின்னர், 2013-ல் மைசூரில் நடைபெற்ற ஏழாவது ஒலிம்பியாட் போட்டியை இந்தியா நடத்தியது.
பல்வேறு கட்ட பயிற்ச்சிகளுக்கு பிறகு போட்டிக்கு சென்ற மாணவர்கள்
இந்த போட்டித்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தேசிய அளவிலான எழுத்துத் தேர்வு மற்றும் சென்னையின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (MSU Baroda) தீவிர பயிற்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.