விளையாட்டு

Badminton Asia Championship | 2வது சுற்றில் எச்.எஸ்.பிரனாய் அதிர்ச்சி தோல்வி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடைபெறுகிறது.

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் வெங் ஹோங்யாங் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.