சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் ஜே யீங் வூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தைவான் வீரர் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, கிரண் ஜார்ஜ் ஆகியோரும் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.