பிரனோய் 
விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - பிரனோய் அரையிறுதியில் தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.முதல் செட்டில் 21-17 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 9-21 என வென்றார்.

மாலை மலர்

கோலாலம்பூர்:

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரனோய் மற்றும் ஹாங் காங் வீரரான லாங் அங்குஸ் மோதினர். முதல் செட்டில் 17-21 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 21-9 என வென்றார். மூன்றாவது செட்டை லாங் அங்குஸ் 21-17 என போராடி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.