விளையாட்டு

சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீரர் 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

இதேபோல், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா சிஹாக், தாய்லாந்து வீராங்கனை புசானன் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய புசானன் முதல் செட்டை 21-19 என வென்றார். இதற்கு பதிலடியாக தேவிகா சிஹாக் 21-19 என 2வது செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை புசானன் 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் தேவிகா சிஹாக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்தியாவின் முன்னணி நட்சந்த்திரங்களான லக்சயா சென், பி.வி.சிந்து உள்ளிட்டோர் நாளை விளையாட உள்ளனர்.