விளையாட்டு

வரலாறு உங்களை சிறப்பாக மதிப்பிடும்..!- முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அகர்கருக்கு காம்பீர் பாராட்டு

புதிய தேர்வு குழு தலைவருக்கான விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. வரவேற்றுள்ளது.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் வீர களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவராக பணியாற்றினார்.

அகர்கர்

அவரது ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 2027 ஒருநாள் போட்டி உலககோப்பை வரை அகர்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முதலில் விரும்பியது. ஆனால் நீட்டிப்பு வழங்கவில்லை.

ரோகித் சர்மா விவகாரமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து அகர்கர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

முன்னாள் சுழற்பந்து வீரர் பிரக்யான் ஓஜா தற்காலிக தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய தேர்வு குழு தலைவருக்கான விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. வரவேற்றுள்ளது.

வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிகிறது.

காம்பீர் பாராட்டு

இந்தநிலையில் அஜித் அகர்கரின் தேர்வு குழு தலைவர் சேவையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அஜித் அகர்கருடன் பணி ற்றியது மிகுந்த பெருமைக்குரியது. அவரது தேர்வு காலத்தில் 3 ஐ.சி.சி. கோப்பைகள் கிடைத்தது.

அணிக்குத்தான் முதலிடம், அணிதான் முக்கியம் என்ற அவரது உறுதியான நிலைப்பாடு அவரது சான்றாக இருக்கிறது.

வரலாறு உங்களை (அகர்கர்) சிறப்பாகவே மதிப்பிடும் என்று நான் உறுதியாக கூறுவேன். எல்லாவற்றுக்கும் நன்றி. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு காம்பீர் கூறி உள்ளார்.

3 ஐ.சி.சி. கோப்பை

அகர்கரின் பதவிக்காலத்தில் இந்தியா 2024 மற்றும் 2026-ல் 20 ஓவர் உலக கோப்பைகளையும், 2025-ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது.

இந்த காலகட்டத்தில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அப்போது ஏற்பட்ட அணி மாற்ற சூழலையும் அவர் கையாண்டார். அவர் கடுமையான அணுகுமுறை கொண்டவராகக் கருதப்பட்டார்.

SCROLL FOR NEXT