விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற பி.எஸ்.ஏ. சேலஞ்சர் டூர் ஸ்குவாஷ்: சுராஜ் சந்த் சாம்பியன்

இந்திய வீரர் சுராஜ் சந்த் தென்கொரியா வீரரை 11-5, 11-9, 11-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னையில் நடைபெற்ற ஹெச்.சி.எல். பி.எஸ்.ஏ. சேலஞ்சர் டூர் ஸ்குவாஷ் போட்டியில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுராஜ் குமார் சந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் தென்கொரியாவின் ஜியோங்மின் ரியூ-வை 11-5, 11-9, 11-3 என வீழ்த்தினார்.

உலகத் தரவரிசையில் 134-வது இடத்தில் உள்ள சுராஜ் குமார் சந்த் (இந்தத் தொடருக்கான 2-ம் தரவரிசை), 8-வது தரவரிசையில் உள்ள தென்கொரியா வீரருக்கு அதிர்ச்சி அளித்தார்.

பெண்களுக்கான போட்டியில் எகித்து வீராங்கனை ருகையா உத்மான் மலேசியாவின் ஹர்லீன் டான்-ஐ 12-10, 11-7, 9-11, 11-7 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.