காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று கொடுத்தவர் மீராபாய் சானு.
பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியின் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் 190 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளின் மற்றும் ஜெர்க் முறையில் 105 கிலோவும் தூக்கினார்.
மணிப்பூரை சேர்ந்த 31 வயது வீராங்கனையான மீராபாய் சானு காமன் வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்று முத்திரை பதித்தார். 2018, 2022 போட்டிகளிலும் அவர் தங்கப் பதக்கம் வென்று இருந்தார்.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியிலும் அவர் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து இருந்தார். தற்போது காமன் வெல்த்தில் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதித்து உள்ளார். பதக்க அணிவிப்பு நிகழ்ச்சியில் மீராபாய் சானு ஆனந்த கண்ணீர் விட்டார்.
தங்கம் வென்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
இக்கட்டான மற்றும் சாதகமான சூழ்நிலைகள் அனைத்திலும் எனக்கு தாயார் மற்றும் பயிற்சியாளர் விஜய்சர்மா ஆதரவு அளித்துள்ளார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து எனக்கு அதிகமான அழுத்தம் இருந்தது. இதனால் இந்தியாவுக்காக ஹாட்ரிக் தங்கம் பதக்கத்தை வென்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது முதல் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. நானும் பயிற்சியாளரும் அடுத்த முயற்சிகளில் நன்றாக செயல்பட முடியும் என நினைத்து இருந்தோம்.
எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட்டேன். என் எடையை கையாளுவது மிகவும் கடினம். எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகவும் பெரும் போராட்டம் ஆகும்.
நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. சரியான உடல் எடையை அடைய நான் எல்லாவரையும் நிறுத்த வேண்டி உள்ளது. என்னால் உணவு உண்ண முடியவில்லை. நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. 2 நாட்களாக சாப்பிடவில்லை.
50.5 கிலோ என்பது எனது இயல்பான எடை. 48 கிலோவுக்கு அதை குறைப்பது மிகவும் கடினமானது.
இவ்வாறு அவர் கூறினார்.