விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானா, தமிழ் தலைவாஸ் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வென்று 8 வது வெற்றியைப் பதிவு செய்தது.

மாலை மலர்

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 47-30 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வென்றது.