விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

மாலை மலர்

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இறுதியில், அரியானா அணி 36-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 30-28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.