விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்த்திக் பாண்ட்யா கொல்கத்தாவுக்கு மாற்றம்?

இது தொடர்பாக இரு அணி நிர்வாகமும் வீரர்கள் பரிமாற்றம் குறித்து பேசி வருகிறது.

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக இரு அணி நிர்வாகமும் வீரர்கள் பரிமாற்றம் குறித்து பேசி வருகிறது.

ஹர்திக் பாண்ட்யாவைவிட்டு கொடுக்க ரகுவன்ஷி, ஹர்சித் ரானா ஆகிய வீரர்களை மும்பை அணி விரும்புவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ரிங்குசிங் ஆகிய 3 வீரர்களை எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் விடுவிக்க கொல்கத்தா அணி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT