விளையாட்டு

முன்னாள் மனைவிக்கு ரூ.4 கோடி லேண்ட் ரோவர் காரை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!

கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார்மஹிகா சர்மாவை டேட் செய்துவருகிறார் ஹர்திக்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காரின் பின்னால் "தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு" என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024-ல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.