ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் வுஷு விளையாட்டின் 18 வயதாக இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கடைசி நமிடத்தில் நீக்கப்பட்டேன். 60 கிலோ சாண்டா பிரிவில் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டேன். மாதக்கணக்கில் மனதளவில் துன்புறுத்தப்பட்டேன். வாழ்வதில் இனி எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரோஷிபினா தேவி என்பவர் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவரை தேர்வுக்கான போட்டியில் திவ்யான்ஷி வீழ்த்தியிருந்தார். இருந்தபோதிலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் விஷு பெடரேசன், திவன்யான்ஷிக்கு மருத்துவ ஆய்வின்போது ACL காயம் கண்டறியப்பட்டது. போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் வகையில் முறையான பயிற்சியை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், திவ்யான்ஷியின் பயிற்சியாளர் அஷோக் கவுதம், ஆசிய போட்டியில் நீக்குவதற்கு ஏற்ப மோசமான நிலையில் காயம் இல்லை. கடைசி நேரத்தில் மாற்று வீராங்கனையை தேர்வு செய்ய காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோஷிபினாவுக்கும் இரண்டு கால்களில் ACL காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மட்டும் தேர்வு செய்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வீராங்கனை ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.