ஞானேஷ்வரி யாதவ்
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்

Snatch முறையில் 88 கிலோவும், Clean and Jerk முறையில் 111 கிலோவும் தூக்கி 2-வது இடம் பிடித்தார்.

காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற பளுதூக்குதல் இறுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் போட்டியிட்டார்.

Snatch முறையில் 88 கிலோ

மொத்தம் 10 பேர் கலந்து கொண்டதில் இருவர் முழுமையாக போட்டியை நிறைவு செய்யவில்லை. இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் Snatch முறையில் 88 கிலோ தூக்கினார். மொத்தம் 3 முறை முயற்சி செய்ய வேண்டும். அதில் எந்த முறை அதிக பளு தூக்குகிறாரோ? அது குறித்துக் கொள்ளப்படும். இவர் முதல் முயற்சியில் 82, 2-வது முயற்சியில் 85, 3-வது முயற்சியில் 88 கிலோ தூக்கினார்.

Clean and Jerk முறையில் 111 கிலோ

அதன்பின் நடைபெற்ற Clean and Jerk முறையில் 111 கிலோ தூக்கினார். முதல் முயற்சியில் 103, 2-வது முயற்சியில் 107, 3-வது முயற்சியில் 111 என தூக்கினார். இறுதியாக இரண்டையும் சேர்த்து 199 (88+111) கிலோ தூக்கி 2-வது இடம் பிடித்தார்.

நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார். கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT