விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்

வெறும் 0.37 வினாடிகள் வித்தியாசத்தில் குல்வீர் சிங் தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற தடகளத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

வெள்ளி வென்ற குல்வீர் சிங்

ஆண்கள் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது தனிநபர் சிறந்த நேரத்தை பதிவு செய்த அவர், வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தனது 2வது வெள்ளிப் பதக்கத்தை வென்று இருக்கிறார்.

ஜப்பான் வீரர் கசுடோ இஜாவா 3:36.35 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

வெறும் 0.37 வினாடிகள் வித்தியாசத்தில் குல்வீர் சிங் தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஜப்பான் வீரரான நகியா மோரி 3:37.92 நிமிடங்களில் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இரட்டை வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

ஏற்கனவே, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் குல்வீர் சிங் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்திருந்தார்.

தற்போது 1500 மீட்டர் பந்தயத்திலும் வெள்ளி வென்றதன் மூலம், ஒரே ஆசிய தொடரில் 2 வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.

இந்தியா இதுவரை 4 தங்கம், 18 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT