விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத், அரியானா அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. அரியானா அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே குஜராத் அணியினர் அதிரடியாக ஆடினர்.

இறுதியில், குஜராத் அணி 47-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. இது குஜராத் அணி பெற்ற 2-வது வெற்றி ஆகும்.

மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 37-32 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி 7வது வெற்றியைப் பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.