விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

மாலை மலர்

புதுடெல்லி:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே குஜராத் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

இறுதியில், குஜராத் அணி 40-32 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.