சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ராஷ்மி கணேஷ் - அம்ருதா பிரமுதேஷ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-8, 21-7 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.