விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய ஜாலி-கோபிசந்த் ஜோடி

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, பிரான்சின் கேமிலி போக்னென்ட்-மார்கட் லாம்பர்ட் ஜோடி உடன் மோதுவதாக இருந்தது.

இதில் பிரான்ஸ் ஜோடி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT