சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உக்ரைனின் யேஹினிலா-புரோவா ஜோடி உடன் மோதியது.
ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய உக்ரைன் ஜோடி முதல் செட்டை 21-13 என வென்றது. இதற்கு பதிலடியாக ஆடிய இந்திய ஜோடி 2வது செட்டை 21-10 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய ஜாலி-கோபிசந்த் ஜோடி 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஜாலி-கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியா ஜோடியை எதிர்கொள்கிறது.