நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் அல்லது மனவ் சுதரை சேர்க்காதது ஏன் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ்தளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள் தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரிலும் நன்றாக விளையாடுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் போட்டியில் நாட்கள் செல்ல செல்ல மாற்றம் அடையும் வெளிநாட்டு ஆடுகளங்களில் வெற்றி பெற சிறப்பான சுழற்பந்து வீரர்கள் வேண்டும் என்பதை அணி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.
வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராக விளையாட முடியும். ஆனால் குல்தீப் யாதவ் அல்லது மனவ் சுதர் எங்கே?
இவ்வாறு கங்குலி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்ற குல்தீப் யாதவ் பின்னர் விலகினார். அவருக்கு பதிலாக அணியில் குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டார்.