உலகக் கோப்பை கால்பந்தில் இறுதிப்போட்டி நாளை அர்ஜென்டினா - ஸ்பெயின் இடையே நடைபெற உள்ளது.
இதனிடையே வெண்கலப் பதக்கம் யாருக்கு என தீமானிக்கும் 3வது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து - பிரான்ஸ் இடையே இன்று நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து ஆக்ரோஷமான ஆடியது. கேப்டன் டெக்லான் ரைஸ் மூன்றாவது நிமிடத்தில் நீண்ட தூர கோல் அடித்தார்.
18வது நிமிடத்தில், எஸ்ரி கோன்சா தலையால் முட்டி கோல் அடித்து, கோல் கணக்கை 2-0 என மாற்றினார்.
பின்னர், புகாயோ சாகா 37வது மற்றும் 43வது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை அடித்து, 4-0 என்ற முன்னிலைக்கு இங்கிலாந்தை இட்டுச் சென்றனர்.
இடைவேளைக்குப் பிறகு உஸ்மான் டெம்பலே மற்றும் பிராட்லி பார்கோலாவின் வருகை பிரான்சுக்கு புத்துயிர் அளித்தது.
பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் கணக்கை தொடங்கினார்.
10 நிமிடங்கள் கழித்து, பார்கோலா ஒரு கோல் அடித்து, கோல் வித்தியாசத்தை 4-2 என உயர்த்தினார்.
67வது நிமிடத்தில், எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடிக்க, ஆட்டத்தின் ஸ்கோர் 4-3 ஆனது.
87வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் புகாயோ சாகா தனது 3 வது கோலையும் அணியின் 5வது கோலையும் பதிவு செய்தார்.
இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 5-3 என முன்னிலையில் இருந்த நிலையில், கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அப்போது 94 வது நிமிடத்தில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பலே கோல் அடிக்க முன்னிலை 5-4 ஆக குறைந்தது.
இருப்பினும் 98 வது நிமிடத்தில் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடிக்க 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3 வது இடத்தை பிடித்தது.
இந்த போட்டி 1982க்குப் பிறகு ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையையும் படைத்தது
இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 22வது கோல்களை பதிவு செய்து லியோனல் மெஸ்ஸியின் 21 கோல்கள் என்ற சாதனையை பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வே முறியடித்தார்.
மேலும், இந்தத் தொடரில் 10 கோல்களுடன் கோல்டன் பூட் விருதிற்கான போட்டியில் முதலிடத்தையும் அவர் அடைந்தார்.