அமெரிக்காவின் ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து குரூப் F பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் - நெதர்லாந்து அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம் யாருக்கும் சாதகம் இல்லாமல் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது
ஆட்டம் முடிந்தவுடன் ஜப்பான் கால்பந்து ரசிகர்கள் மைதானத்தை விட்டு அப்படியே வெளியேறாமல் தாங்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டம் முடிந்ததும் தாங்கள் கையோடு கொண்டுவந்திருந்த பாலிதீன் பைகளில் இருக்கைகளுக்கு இடையே மற்றவர்களால் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை குழுக்களாக பிரிந்து அவர்கள் சேகரிப்பது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ சுட்டிக்காட்டி ஜப்பானியர்களின் சமூக பொறுப்பை பலரும் மெச்சி வருகின்றனர்.