கால்பந்து

UEFA சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜி, அட்லெடிகோ மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்- பார்சிலோனா, லிவர்பூல் ஏமாற்றம்

காலிறுதி இரண்டு லெக்கிலும் சேர்த்து அட்லெடிகோ மாட்ரிட் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது.

UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதி 2-வது லெக் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இரண்டு போட்டிகளில் நடைபெற்றன. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட்- பார்சிலோனா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் 0-2 எனத் தோல்வயிடைந்ததால், இரண்டிலும் சேர்த்து 2-3 என பார்சிலோனா தோல்வியடைந்தது.

மற்றொரு போட்டியில் பிஎஸ்ஜி- லிவர்பூல் அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி 2-0 என வெற்றி பெற்றது. முதல் லெக்கிலும் 2-0 என வெற்றி பெற்றதால், 4-0 என பிஎஸ்ஜி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்று நள்ளிரவு தொடங்கி, நாளை அதிகாலை வரை நடைபெறும் மற்ற இரண்டு போட்டிகளில் பேயர்ன் முனிச்- ரியல் மாட்ரிட் (முதல் லெக்கில் 2-1), அர்செனல்- ஸ்போர்ட்டிங் (1-0) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.