கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் மற்றும் கேபோ வெர்டெ இடையிலான ஆட்டம் டிரா

ஸ்பெயின் அணி கோல் அடித்து போட்டியின் போக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் H பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டே அணிகள் இன்று களம் கண்டன.

பலம் வாய்ந்த அணி என்பதால் ஸ்பெயின் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது. என்னும், ஸ்பெயினை எதிர்த்து களம் கண்ட கேபோ வெர்டெ அணி கடும் போட்டியை ஏற்படுத்தியது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் அணி கோல் அடிக்கும் முனைப்பில் அதிக கவனம் செலுத்தியது. எனினும், கேபோ வெர்டெ அணி சிறப்பாக ஆடி ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகளை திறமையாக ஆடி தடுத்தது.

இதன் காரணமாக போட்டியின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி கோல் அடித்து போட்டியின் போக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும், இரு அணிகளும் கோல் அடிக்கவும் மறுப்பக்கம் கோலை தடுக்கும் முயற்சியில் கவனம் செலுத்தின. இதன் காரணமாக போட்டியின் இரண்டாவது பாதியில், ஆட்ட நேர முடியும் வரையிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்த காலக்கெடுவிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. போட்டி டிரா ஆனதை அடுத்து ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டெ என இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.