உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்கா அணியும் ஒன்று. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.
தென்ஆப்பிரிக்கா குரூப் ஏ-யில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் மெக்சிகோ, தென்கொரியா, செக்குடியரசு இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா ஒரு போட்டியை அமெரிக்காவில் சென்று விளையாட இருக்கிறது. ஜூன் 11-ந்தேதி மெக்சிகோவில் முதல் போட்டியில் விளையாடுகிறது.
உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்த நிலையில் சில வீரர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு விசா வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று புறப்பட இருந்து தென்ஆப்பிரிக்கா அணி புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஈரான் பாதுகாப்பை காரணத்திற்காக பயிற்சி முகாமை அமெரிக்காவில் இருந்து மாற்றியுள்ளது.