உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், குரூப் சி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் ஸ்காட்லாந்து, ஹைதி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர் ஜான் மெக்கின் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என ஸ்காட்லாந்து அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 1-0 என ஹைதி அணியை வீழ்த்தியது.