உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் சமீபத்தில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவருக்கு பிரியா விடை அளிக்க போர்ச்சுகல் அணி முடிவு செய்தது. அந்த வகையில் நேற்ற சொந்த மண்ணில் டென்மார்க் அணியை போர்ச்சுகல் எதிர் கொண்டது. இதில் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் அனைத்து வீரர்களும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 7-ம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் போர்ச்சுகல் 1-4 என படுதோல்வியை சந்தித்தது.
இந்தத் தோல்வி போர்ச்சுகல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு பிராகாவில் நடைபெற்ற UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதும் நிலைமை தலைகீழானது. முதல் பாதியின் 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி டென்மார்க்கின் பியர்-எமில் ஹோய்பெர்க் முதல் கோலை அடித்தார்.
இரண்டாவது பாதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஹோய்லுண்ட் 50 மற்றும் 57-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போர்ச்சுகல் அணியை நிலைகுலையச் செய்தார். 75-வது நிமிடத்தில் ஜோக்கிம் ஆண்டர்சன் நான்காவது கோலை அடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெர்னார்டோ சில்வா போர்ச்சுகலுக்காக ஆறுதல் கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் 1-4 எனத் தோல்வியடைந்தது.
போட்டித் தொடரில் சொந்த மண்ணில் போர்ச்சுகல் சந்தித்த மிக மோசமான அதிகாரப்பூர்வ தோல்வியாக இது அமைந்தது.
234 சர்வதேச போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்த ரொனால்டோவின் பிரியாவிடை இரவு, போர்ச்சுகல் அணிக்கு மறக்க முடியாத சோகமான இரவாக மாறியது.
இந்தத் தோல்விக்குப் பிறகும் போர்ச்சுகல் 12 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.