கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: முதல் போட்டியை தவறவிடும் நெய்மர்-ரசிகர்கள் அதிர்ச்சி

பிரேசில் அணி கால்பந்து உலகக் கோப்பையை 5 தடவை கைப்பற்றியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற நாடு பிரேசில். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அந்த அணி 5 தடவை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதற்கிடையே, பிரேசில் அணி 6-வது தடவையாக உலகக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பிரேசில் இந்த உலகக் கோப்பையில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் அந்தப் பிரிவில் உள்ளன.

பிரேசில் அணி தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை சந்திக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் தொடங்குகிறது. பிரேசில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரம் மொராக்கோ தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கிறது. இதனால் அந்த அணி கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பையில் மொராக்கோ 4-வது இடத்தை பிடித்தது.

இந்நிலையில், காயம் காரணமாக மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கால் தசை காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணம் அடையவில்லை. இதனால் ‘லீக்’ ஆட்டம் அனைத்திலும் அவர் ஆடுவது சந்தேகமே என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT