23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.
கான்சாஸ் மைதானத்தில் நடந்த 'எப்' பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - துனிசியா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 3 வது நிமிடத்திலேயே துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக சேம் சைடு கோல் அடித்ததால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
7வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரையன் ப்ரோபி கோல் அடித்தார். இதன் பின் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்காததால் நெதர்லாந்து 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் சுதாரித்த துனிசியா 54 வது நிமிடத்தில் ஹசெம் மஸ்தூரி மூலம் ஒரு கோல் ஈட்டி 2-1 என்ற நிலைக்கு வந்தது.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜான் பால் வான் ஹெக்கே அடித்த கோல் மூலம் ஆட்டம் 3-1 ஆனது.
இதன் பின் ஒரு அணிகளும் கோல் அடிக்காமல் நேரம் முடிந்தது. இறுதியில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வெற்றி கொண்டது.