உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் மெக்சிகோ, தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆனால் முதல் பாதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 50-வது நிமிடத்தில் மெக்சிகோவின் லூயிஸ் ரோமோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின், இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், மெக்சிகோ அணி 1-0 என தென் கொரியாவை வீழ்த்தியது. இதன்மூலம் மெக்சிகோ அணி நாக் அவுட் சுற்றுக்கு நுழைந்தது.