மெஸ்ஸி  
கால்பந்து

கால்பந்தில் புதிய மைல்கல் சாதனை படைத்த மெஸ்ஸி

81வது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கினார்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்தும், மற்றொரு கோலுக்கு உதவியும் மெஸ்ஸி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

100வது கோல்

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில், சக வீரர் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸ் பந்தை, அவர் ஒரு அற்புதமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக மாற்றினார். இது இன்டர் மியாமி அணிக்காக அவர் அடித்த 100வது கோலாகும்.

வெறும் 115 போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம், 'மேஜர் லீக் சாக்கர்' (MLS) வரலாற்றில் ஒரு கிளப்பிற்காக 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

மெஸ்ஸி இதுவரை மியாமி அணிக்காக 100 கோல்களை அடித்ததோடு மட்டுமில்லாமல் 55 கோல்களை அடிக்க உதவியும் உள்ளார்.

கடந்த ஆட்டத்திலும் 81வது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கி, அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், இன்டர் மியாமி தனது வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

சாம்பியன்ஸ் கோப்பை

இந்தப் போட்டி, அமெரிக்காவின் MLS கோப்பை வெற்றியாளருக்கும் மெக்சிகோவின் லிகா MX வெற்றியாளருக்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகறது.

கடந்த மூன்று சீசன்களாக மெக்சிகன் அணிகள் இந்தக் கோப்பையை வென்று வந்த நிலையில், மியாமி அவர்களின் ஆதிக்கத்தை முறியடித்தது.

இது புதிய தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ்டியன் கோன்சாலெஸின் முதல் போட்டியாகும். அவர் தனது முதல் போட்டியிலேயே அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்ததள்ளார்.

2023ல் இன்டர் மியாமியில் இணைந்தார் மெஸ்ஸி. 39 வயதிலும் சிறப்பான பார்மில் இருக்கும் மெஸ்ஸி, தனது வருகைக்குப் பிறகு லீக்ஸ் கோப்பை, சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் மற்றும் MLS கோப்பை போன்ற பல பட்டங்களை அணிக்குப் பெற்றுத் தந்துள்ளார்.

SCROLL FOR NEXT