பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான லியான் (Olympique Lyonnais OR Lyon), தனது புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் விசென்ஸை (Carlos Vicens) நியமித்துள்ளது.
லியான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பவுலோ பொன்சேகா, திடீரென தனது பதவியில் இருந்து விலகி, தனது சொந்த நாட்டின் கிளப்பான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணியில் இணைய முடிவு செய்தார். இதனால் லியான் நிர்வாகம் புதிய பயிற்சியாளரைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
பொன்சேகாவின் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்காக ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணி, லியானுக்கு 5 மில்லியன் யூரோக்களை இழப்பீடாக வழங்கியுள்ளது. இதையடுத்து, 43 வயதான கார்லோஸ் விசென்ஸ் 18 மாதம் என்ற வகையில் 2028 ஜூன் 30 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் சிட்டி அணியில் பெப் கார்டியோலாவின் பயிற்சிக் குழுவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் விசென்ஸுக்கு உள்ளது. பின்னர் போர்ச்சுக்கலின் பிராகா அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.
அவரது தலைமையில் எஸ்.சி. பிராகா (SC Braga) அணி ஐரோப்பிய லீக் அரையிறுதி வரை முன்னேறியது.