மெஸ்சி
கால்பந்து

பிஃபா உலக கோப்பை: லீக் போட்டிகள் முடிவில் நம்பர் ஒன் வீரர் யார் தெரியுமா?

பிஃபா உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லீக் போட்டிகளில் மட்டும் 6 கோல்கள் அடித்துள்ளார்.

பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அதே பிரிவுகளில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 24 அணிகள் அடுத்த சுற்றான ரவுட்ஆஃப் 32-க்கு முன்னேறும். மீதமுள்ள 8 அணிகள் 12 பிரிவுகளிலும் சேர்த்து முதல் 8 இடங்களை பிடிக்கும் அணி தகுதி பெறும்.

அதன்படி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நாக்அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32 நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவில் யார் நம்பர் ஒன் வீரர் என்ற பட்டியலை பிஃபா வெளியிட்டுள்ளது.

மெஸ்சி, எம்பாப்பே

லீக் போட்டிகளில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 போட்டிகளில் 6 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அதேபோல் பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். அதேபோல் பிரான்ஸ் அணியின் மற்றொரு வீரர் ஓஸ்மானே டிம்ப்ளே, பிரேசில் அணியனி் வின்சியஸ் ஜூனியர், நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.

ஜெர்மணி வீரர் டெனிஸ் உண்டாவ்

இதனடிப்படையில் மெஸ்சிதான் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெஸ்சிக்கு நம்பர் ஒன் இடம் கொடுக்கப்படவில்லை. இந்த தரவரிசை அட்டாக்கிங், கிரியேட்டிவிட்டி, டிபெண்டிங் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி ஜெர்மனியின் டெனிஸ் உண்டாவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் அட்டாக்கிங்கில் 10-க்கு 8.36 புள்ளிகள் பெற்றுள்ளார். கிரியோட்டிவிட்டியில் 6.78 புள்ளிகள் பெற்றுள்ளார். டிபெண்டிங்கில் 4.7 புள்ளிகள் பெற்றுள்ளார். அதேவேளையில் மெஸ்சி முறையே 8.34, 6.43 மற்றும் 5.14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார். எம்பாப்வே 8.13, 7.25, 4.59 புள்ளிகள் பெற்றுள்ளார். வின்சியஸ் ஜூனியர் 7.92, 6.39, 4.75 புள்ளிகள் பெற்றுள்ளார்.

ரொனால்டோ ஏமாற்றம்

எம்பாப்வே 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், பின்சியஸ் ஜூனியர் 4-வது இடத்தை பிடித்துள்ளார். லீக் போட்டிகளில் ஏமாற்றம் அடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 5.72, 4.98, 4.74 புள்ளிகளுடன் 79-வது இடத்தை பிடித்துள்ளார்.