கால்பந்து

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி ஓய்வு - 21 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது!

8 முறை சிறந்த வீரர் விருது என வரலாறு படைத்த லெஜண்டின் மறக்க முடியாத பயணம் முடிவுக்கு வந்தது.

மெஸ்சியின் மறக்க முடியாத முக்கிய தருணங்கள் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சி சர்வ தேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான அவர் 21 ஆண்டுகாலம் கால்பந்து உலகில் முத்திரை பதித்தார்.

மெஸ்சி ஓய்வு

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த அவர் 2016-ம் ஆண்டு ஓய்வு பெற முடிவு செய்தார். பின்னர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கால்பந்து ஜாம்பவனாக ஜொலித்தார். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோற்றது.

தோல்வியடைந்த 2 நாட் களுக்குப் பிறகு அதாவது ஜூலை 21-ந்தேதியே தனது ஓய்வு முடிவை வெளியிட தயாராக இருந்தார். தந்தை உடல்நலம் பாதிப்பு காரணமாக அதை வெளியிடுவதில் தாமதம் செய்தார்.

அவரது தந்தை இறந்த பிறகு தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

மெஸ்சி சாதனை

6 உலக கோப்பையில் விளையாடி உள்ள அவர் அர்ஜென்டினா அணிக்கு 2022-ல் உலககோப்பை பெற்றுக் கொடுத்தார். 2 முறை இறுதிப்போட்டி வரை வந்து உலக கோப்பையை இழந்தார். 2 கோபா அமெரிக்கா கோப்பையை வென்றார்.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் நேசிக்கப்படும் லியோனல் மெஸ்சி மறக்க முடியாத தருணங்கள் நிறைய இருக்கின்றன.

உலக கோப்பையில் அறிமுகம்

2005-ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டியில் அங்கேரிக்கு எதிராக அறிமுகமானார். 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் அறிமுகமான போது அவருக்கு 18 வயதாகும்.

செர்பியா மற்றும் மாண்டென்க்ரோவுக்கு எதிராக மெஸ்சியின் தனது முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினா அணிக்காக உலககோப்பையில் கோல் அடித்த இளம் வீரராக அவர் ஜொலித்தார்.

மரடோனாவுடன் சந்திப்பு

2010 உலககோப்பை அர்ஜென்டினாவின் மற்றொரு கால்பந்து ஜாம்பவானான டிகோ மரடோனாவுடன் மெஸ்சியை ஒன்றிணைத்தது.

அப்போது அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தார். கால் இறுதியில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. மெஸ்சியின் பரிணாம வளர்ச்சியில் இந்த போட்டி ஒரு முக்கிய கட்டமாக இருந்தது.

பார்சிலோனா கிளப்பில் சாதனை

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடினார். 2022-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி கிரனடா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் பார்சிலோனா கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் அந்த கிளப்புக்காக 672 கோல்கள் அடித்தார்.

அவரது அபாரமான ஆட்டம் அந்த கிளப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

91 கோல்கள் அடித்த ஆண்டு

2012-ல் கால்பந்து வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு மெஸ்சி அதிக கோல்களை அடித்து சாதித்தார். அவர் மொத்தம் 91 கோல்களை அடித்தார்.

இதில் கிளப்புக்காக 79 கோல்களை பதிவு செய்தார். எஞ்சிய 12 கோல் நாட்டுக்காக அடித்தார். முல்லரின் சாதனையை முறியடித்ததோடு அந்த ஆண்டின் 4-வது முறையாக சிறந்த கால்பந்து விருதை பெற்றார்.

2014-ல் லாலிகாவில் கோல் அடிப்பதில் மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அவர் 472 கோல்களை பதிவு செய்தார்.

முதல் சர்வதேச கோப்பை

2021 ஜூலை மாதம் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக முதல் சர்வதேச கோப் பையை பெற்றுக் கொடுத்தார்.

கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரே சிலை தோற்கடித்தது.

36 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை

2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி பெற்றுக் கொடுத்தார். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை நனவாக்கினார்.

இந்த போட்டித் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்வுப் பெற்றார்.

8-வது சிறந்த வீரர் விருது

உலகில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அவர் 8-வது முறையாக 2023-ல் பெற்று சாதித்தார். சர்வ தேச போட்டியில் சிறப்பான செயல்பாட்டுக்காக அவர் இந்த விருதை பெற்றார்.

உலககோப்பையில் அதிக கோல்

2026 உலககோப்பை யிலும் மெஸ்சி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 கோல்கள் அடித்து உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற உச்ச நிலையை எட்டினார்.

அவரது கோல் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 22 கோல்களை பதிவுசெய்து அவரை முந்தி முதலிடத்தை பிடித்தார்.

கடைசி உலககோப்பை

மெஸ்சியின் கடைசி உலக கோப்பை பயணமாக அது அமைந்தது. இறுதிப்போட்டி வரை அர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றாலும் அவரது தனிப்பட்ட செயல்பாடு மறக்க இயலாது.

அர்ஜென்டினாவை பொறுத்தவரை இனி ஒரு போதும் மற்றொரு மெஸ்சி வரப்போவதில்லை. ஏறக்குறைய 21 ஆண்டுகள் கால்பந்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி அர்ஜென்டினா அணியை தன் தோளில் சுமந்தார்.

விடைபெறுவதை நினைத்து மெஸ்ஸியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.