கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான போட்டி டிரா

90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற 11-ஆவது லீக் போட்டியில் குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் முயற்சி கைகூடவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் 2வது பாதியில் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க அதிக முனைப்பு காட்டினர். இதனால் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களை பறக்க விட்டன. ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் கோல் அடித்தார்.

பரபரப்பான களம்:

இதையடுத்து, ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் இருந்தது. தொடர்ந்து, ஆட்டத்தின் 64-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடித்தார். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

போட்டி இறுதிகட்டத்தை நெறுங்கிய நிலையில் 88-ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்தார். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது

ஆட்டம் டிரா:

90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போதும், இரு அணிகளும் கோல் அடிக்க முற்பட்டன. எனினும், கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டத்தின் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டி டிரா ஆனதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.