கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் - டி.ஆர். காங்கோ அணிகள் இடையிலான போட்டி டிரா

45-ஆவது நிமிடத்தில் டி.ஆர். காங்கோ தனது முதல் கோலை அடித்தது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் K சுற்றில் போர்ச்சுகல் மற்றும் டி.ஆர். காங்கோ அணிகள் இன்று களம் கண்டன. ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி டி.ஆர். காங்கோ அணியை எதிர்கொண்டு ஆடியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிடத்திலேயே தனது முதல் கோலை அடித்தது. போர்ச்சுகல் வீரர் பெட்ரோ நெடோ அசிஸ்ட்-ஐ ஜோவ் நெவெஸ் கோலாக மாற்றினார்.

இதைத் தொடர்ந்து டி.ஆர். காங்கோ அணி பதில் கோலை அடிக்க தீவிரம் காட்டியது. அதன்படி ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் டி.ஆர். காங்கோ தனது முதல் கோலை அடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு அதிகரித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் இரு அணிகளும் வீரர்களை மாற்றி, கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

எனினும், ஆட்டத்தின் கடைசி வரை இரு அணிகளாலும் வெற்றிக்கான கோலை அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.