கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: செக் குடியரசு - தென் ஆப்பிரிககா இடையிலான ஆட்டம் டிரா

செக் குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், க்ரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள செக் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

அட்லான்டா மைதானத்தில் நடந்த போட்டியின் 6-ஆவது நிமிடத்திலேயே செக் குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது. செக் குடியரசு அணியின் அலெக்சான்டர் சோஜ்கா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக் குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை செக் குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. இதற்கு பலனாக 83-ஆவது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன.

ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின. இதனால், இந்தப் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.