ரொனால்டோ
கால்பந்து

ரொனால்டோவை சஸ்பெண்ட் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து அணி

Warm-Up செய்த பிறகு, போட்டியில் களம் இறக்கவில்லை என ரொனால்டோ விளக்கம்.

UEFA நேஷன்ஷஸ் லீக்கில் போர்ச்சுக்கல் அணி டென்மார்க்கை எதிர்த்து விளையாட இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக போர்ச்சுக்கல் அணியின் முகாமில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கியுள்ளது. இதனால் போர்ச்சுக்கல் கால்பந்து பெடரேசன் அவரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

போர்ச்சுக்கல் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனது பக்கம் உள்ள நியாயம் குறித்து ரொனால்டோ நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 24 அன்று வேல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது, அதைத் தொடர்ந்து வரும் நார்வே (செப்டம்பர் 27) மற்றும் டென்மார்க் (அக்டோபர் 1) அணிகளுக்கு எதிரான போட்டிகளைத் தவிர்ப்பது, பின்னர் அக்டோபர் 5 அன்று நார்வேக்கு எதிரான மறுபோட்டியில் விளையாடுவது என ஜீசஸ் (பயிற்சியாளர்) ஒரு திட்டத்தை வகுத்திருந்திருந்தார்.

இடைப்பட்ட போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று பயிற்சியாளர் பரிந்துரைத்த போதிலும், அணியின் கேப்டனாக ஒரு முன்னுதாரணமாகத் திகழவும், விளையாடாத நிலையிலும் அணியுடன் இருக்கவும் ரொனால்டோ விரும்பினார்.

நார்வேக்கு எதிரான போட்டி நடந்த செப்டம்பர் 27 அன்று மதிய உணவு வேளையில், பயிற்சியாளர் தனது முடிவை மாற்றிக்கொண்டு தன்னை 30 நிமிடங்கள் விளையாட வைக்கப்போவதாக ஜீசஸ் கூறினார்.

எனது உடல் மீட்பு மற்றும் பயிற்சித் திட்டத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும், விளையாட ஒப்புக் கொண்டேன். ஆனால், warm-up மேற்கொண்ட பிறகும் விளையாட வைக்கப்படவில்லை.

தேசிய அணிப் பயிற்சியாளர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. அதோடு உண்மையைச் சொல்லி விவகாரத்தை முடித்து வைப்பதாக ஜீசஸ் உறுதியளித்திருந்தார் என்று ரொனால்டோ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், ரொனால்டோ விளையாட வேண்டும் என்று ஒருபோதும் கேட்கவில்லை என்பதும், ஜீசஸ் ஒரு புதிய அட்டவணையை முன்மொழிந்ததும், அவரை Warm-up செய்ய வைத்துவிட்டு விளையாட வைக்காமல் விட்டது அவரது தவறு என்பதும் அடங்கியிருந்தன.

SCROLL FOR NEXT