கால்பந்து

Brazil vs Croatia | நட்பு ரீதியிலான போட்டி: குரோசியாவை 3-1 என வீழ்த்தியது பிரேசில்

உலக கோப்பைக்கான நட்பு ரீதியிலான போட்டியில் குரோசியாவை 3-1 என வீழ்த்தியது பிரேசில். டேனிலோ, இகோர் தியாகோ கோல் அடித்தனர்.

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் ஜூன் மாதம் நடைறெ இருக்கும் நிலையில், பிரேசில்- குரோசியா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நேரத்தில் (45+2) பிரேசில் வீரர் டேனிலோ முதல் கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி நேரத்தில் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

84-வது நிமிடத்தில் குரோசிய வீரர் லோவ்ரோ மேஜர் பதில் கோல் அடித்ததார். இதனால் ஸ்கோர் சமநிலை பெற்றது.

ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி இகோர் தியாகோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் 2-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் (90+2) பிரேசில் வீரர் கேப்ரியல் மார்ட்டினோலி கோல் அடித்தார். இதனால் பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.

டேனிலோ மற்றும் இகோர் தியாகோ ஆகியோர் பிரேசில் அணிக்காக தங்களது முதல் கோலை பதிவு செய்தனர். பிரேசில் அணி ஒரு மஞ்சள் அட்டையும், குரோசியா 3 மஞ்சள் அட்டையும் பெற்றது. இரு அணிகளுக்கும் தலா 2 கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

பிரேசில் வீரர்கள் எதிரணி கோல் எல்லையை நோக்கி 11 ஷாட்ஸ்கள் அடித்தனர். இதில் 7 ஷாட்ஸ் ஆன் டார்கெட் ஆகும். குரோசியா வீரர்கள் 10 ஷாட்ஸ்களும் அடித்தனர். இதில் 4 ஷாட்ஸ் ஆன் டார்கெட் ஆகும்.