கேம்ப் நவு மைதானம்
கால்பந்து

பார்சிலோனாவுக்கு சொந்தமான மைதானத்தில் 2029 சாம்பியன்ஸ் லீக் பைனல்..!

ரியல் மாட்ரிட், மொராக்கோ மைதானங்களும் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முதன்மை கால்பந்து லீக்குகளில் விளையாடும் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படும். இதன் இறுதிப் போட்டி முக்கியமான நகரில் நடத்தப்படும்.

அந்த வகையில் 2028-ம் ஆண்டின் இறுதிப் போட்டி பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடத்தப்படுகிறது.

2029-ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் முன்னணி லீக் அணியான பார்சிலோனாவுக்கு சொந்தமான கேம்ப் நவு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்ப் நவு உடன் லண்டனில் உள்ள விம்ப்ளே மைதானமும் போட்டியிட்டன. இதில் பார்சிலோனா மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலககோப்பை இறுதிப் போட்டியை நடத்த ரியல் மாட்ரிட் விருப்பம்

2030-ம் ஆண்டு உலக கோப்பை போர்ச்சுக்கல், மொராக்கோ, ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக பார்சிலோனா முக்கியமான இறுதிப் போட்டியை நடத்துகிறது.

ரியல் மாட்ரிட் சான்டியாகோ பெர்னாபியு மைதானத்தை புதுப்பித்துள்ளது. அதேபோல் மொராக்கோவில் உள்ள காசாபிளான்கா மைதானமும் 1.15 லட்சம் ரசிகர்கள் இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மைதானங்களும் 2030 உலக கோப்பை இறுதிப் போட்டியை நடத்த போட்டியிடுகின்றன.

கேம்ப் நவு

கேம்ப் நவு மைதானத்தில் 1.05 லட்சம் ரசிகர்கள் இருக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நீண்டகாலமாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

2025-2026 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி- அர்செனல் அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்செனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

SCROLL FOR NEXT