பிபா உலக கோப்பை இறுதிப் போட்டி
கால்பந்து

அர்ஜென்டினா- ஸ்பெயின் மோதும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி நாளை நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டி நியூஜெர்சியில் உள்ள MetLife மைதானத்தில் நடக்கிறது.

அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட் விலையை, அர்ஜென்டினா- ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட்டின் சராசரி விலை முறியடித்துள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை 6943 டாலர்

பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி நாளை நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், பிபா உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் (MetLife Stadium) நடக்கிறது.

இந்த போட்டியை பார்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தர இருக்கிறார். இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த போட்டியை பார்ப்பதற்கான ஒரு டிக்கெட் விலை 6943 டாலராம். இதில் என்ன வேடிக்கை என்றால் அர்ஜென்டினா- இங்கிலாந்து இடையிலான போட்டியை பார்ப்பதற்கு 7200 டாலராக இருந்தது. அதைவிட இறுதிப் போட்டியை பார்க்க சற்று குறைவாகும்.

மெட்லைஃப் ஸ்டேடியத்தின் செக்சன் 115ஏ-ல் உள்ள ஸ்டேண்ட்சில் உள்ள டிக்கெட் விலை 28,479 டாலர் ஆகும். ஒட்டுமொத்தமாக சராசரியாக ஒரு டிக்கெட்டின் நிலை 11,327 டாலர் ஆகும். இந்த விலை அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு போட்டியை காண்பதற்கான அதிகபட்ச டிக்கெட் விலை ஆகும்.

2024-ம் ஆண்டு சூப்பர் பவுல் இறுதிப் போட்டி சான் பிரான்சிஸ்கோ 49ers மற்றும் கன்சாஸ் சிட் சீஃப்ஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை 9,411 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா அணி

தென் அமெரிக்காவின் வலிமையான அணிகளில் ஒன்றான அர்ஜென்–டினா. இதற்கு முன்பு 1930, 1978, 1986, 1990, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. இதில் 3 முறை (1978, 1986, 2022) உலக கோப்பையை கைப்பற்றியது. 3 தடவை பட்டத்தை இழந்தது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 4-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அர்ஜென்டினா இந்த போட்டி தொடரில் தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 2-வது சுற்றில் கேப் வெர்டேயை போராடி தோற்கடித்தது. எகிப்து (3-வது ரவுண்டு), இங்கிலாந்து (அரைஇறுதி) ஆகியவற்றுக்கு எதிராக முதலில் கோல் வாங்கி பின்–தங்கி முன்னேறி வீழ்த்தி இருந்தது.

மெஸ்சி

அர்ஜென்–டினா அணி இறுதிப் போட்டியில் நுழைய முக்கிய பங்கு வகித்தவர் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான அவர் இந்த போட்டி தொடரில் 8 கோல் அடித்து முன்னிலையில் உள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.

மேஜிக்மேன் இன்னும் ஒரு ஆட்டத்தில் இதே திறமையை வெளிப்படுத்தினால் அர்ஜென்டினாவுக்கு கோப்பை கிடைக்கும். 39 வயதான அவர் உடல் தகுதியில் சற்று பின்தங்கி இருந்தாலும் நுணுக்கம், புத்திசாலித்தனம், அனுபவம் ஆகியவற்றால் எதிர் அணியை தடுமாற வைக்கிறார். பெரும்பாலும் களத்தில் நடந்து கொண்டே இருக்கும் அவர் பந்து கிடைக்கும் போது ஆக்ரோஷத்தை வெளிப்–படுத்துகிறார். வீரர்களை ஒருங்கிணைத்து களப் பயிற்சியாளர் போல் செயல்படுகிறார்.

பின்களம் பலவீனம்

மேலும் லவுடரோ பெர்னாண்டஸ் (3 கோல்), என்சோ பெர்னாண்டஸ் (2), லிசாண்டரோ மார்ட்டினஸ், அலெக்ஸ் மேக்அலிஸ்டர், ஜிவோனி லோ செல்சோ, ஜூலியன் அல்வாரெஸ், கிறிஸ்டியன், ரோமிரோ (தலா ஒரு கோல்) போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

பின்–களத்தில் அர்ஜென்டினா பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்–வது அவசியமாகும். ஸ்பெயின் வீரர்கள் பந்தை கடத்தி சென்று கோல் அடிப்பதில் வல்ல–வர்கள். இதனால் அவர்களது தாக்குதல் ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

அர்ஜென்டினா அதிக கோல்களை அடித்த அணியாக திகழ்கிறது. அந்த அணி 19 கோல்கள் அடித்து உள்ளது. அதே நேரத்தில் 7 கோல் வாங்கி உள்ளது. இதனால் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா முழு திறமையை வெளிப்–படுத்த வேண்டும்.

ஸ்பெயின் அணி

ஸ்பெயின் அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு தென்–ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. தனது முதல் இறுதிப் போட்டியிலேயே உலக கோப்பையை வென்று சாதித்தது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அர்ஜென்டி–னாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் இந்தப் போட்டித் தொடரில் தோல்வியை தழுவவில்லை. கேப்வார்டே அணியுடன் மட்டுமே

கோலின்றி ‘டிரா’ செய்தது. மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தியது. அரை இறுதியில் பிரான்சை 2 கோல் போட்டு தோற்கடித்ததன் மூலம் ஸ்பெயின் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.

லமின் யமால்

ஸ்பெயின் அணி–யின் நட்சத்திர வீரர் லமின் யமால் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருப்பார். அவர் ஒரு கோல் மட்டும்தான் அடித்துள்ளார். ஆனால் பந்தை கடத்தி சென்று முன்னேறுவதில் 19 வயதான லமின் யமால் திறமைசாலி ஆவார். 2024-ம் ஆண்டு ஸ்பெயின் அணி, ஐரோப்பிய கோப்பையை வெல்ல அவர் முக்கிய பங்கு வகித்தார். பிரான்சுக்கு எதிரான அரைஇறுதியில் ஒரு கோல் அடித்தார்.

இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஸ்பெயின் வீரராக மைக்கேல் ஒயர்சபால் இருக்கிறார். அவர் 5 கோல்களை பதிவு செய்துள்ளார். மெரினோ, பெட்ரோ போரோ (தலா 2 கோல்கள்), அலெக்ஸ் பயெனா, பேபியன் ரூயிஸ் (தலா 1 கோல்) போன்ற சிறந்த வீரர்களும் ஸ்பெயின் அணியில் உள்ளனர்.

கோல் கீப்பர்

ஸ்பெயின் அணி வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் நீண்ட நேரம் வைத்து எதிர் அணியின் வளையத்தை உடைத்து முன்னேறி சென்று கோல் அடிப்பதில் வல்லவர்கள். முதல் நிலை அணியான பிரான்சுக்கு எதிராக அவர்கள் அற்புதமாக ஆடினார்கள். இதனால் உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி இருக்கிறது.

மேலும் பின்களமும், கோல் கீப்பரும் ஸ்பெயின் அணியின் பலமாக இருக்கிறது. அந்த அணி இதுவரை ஒரு கோல் மட்டுமே வாங்கி உள்ளது. பந்துகளை தடுப்பதில் கோல் கீப்பர் சைமன் அபாரமாக செயல்படுகிறார். பெல்ஜியத்துக்கு எதிராக மட்டுமே அவர் ஒரு கோலை விட்டார். அர்ஜென்–டினா வீரர்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார்.

இரு அணிகளும் உலக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

முன்ன தாக இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்து க்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-இங்கி–லாந்து அணிகள் மோதுகின்றன.

60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையில் மோதல்

அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இரு அணிகளும் உலக கோப்பையில் ஒரே ஒரு தடவைதான் நேருக்கு நேர் சந்தித்தன. 1966-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணிக்காக லூயிஸ் ஆர்டைம் (65 மற்றும் 79-வது நிமிடங்கள்) 2 கோலும், ஸ்பெயின் தரப்பில் பிர்ரியும் கோல் (71-வது நிமிடம்) அடித்தனர்.

சர்வதேச போட்டி மற்றும் நட்பு ஆட்டம் என இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி டிரா ஆனது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஸ்பெயின் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.