கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: ஜோர்டானை 2-1 என வீழ்த்தியது அல்ஜீரியா

முதல் பாதி முடிவில் ஜோர்டான் 1-0 என முன்னிலை பெற்றது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடந்து வருகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘ஜெ’ பிரிவில் உள்ள ஜோர்டான், அல்ஜீரியா அணிகள் மோதின.

தொடக்கத்தில் ஜோர்டான் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் ஜோர்டானின் நிசார் அல்ரஸ்தான்

ஒரு கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதி முடிவில் ஜோர்டான் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் அல்ஜீரியா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். இதையடுத்து, 69, 82 வது நிமிடங்களில் அல்ஜீரியா அணி வீரர்கள் கோல் அடித்தனர்.

இறுதியில், அல்ஜீரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.