ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை தனி ஆளாய் தடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த 40 வயதான கோல் கீப்பர் வோசின்யா தான் இணையத்தில் தற்போது வைரல்.
Vozhinha... இன்றைக்கு தேதியில் உலகில் இருக்க Football ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாவும் அதிசயமாவும் தேடும் ஒரு பேர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் கடல் பகுதியில் இருக்க Cape Verde என்கின்ற சின்ன தீவு நாட்டை சேர்ந்த Football Goalkeeper ஆன Vozhinha நேற்று முன்தினம் நடந்த 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டோட கால்பந்து அணிய ஒரு கோல் கூட அடிக்க விடாம தடுத்து போட்டியை ட்ரா கொண்டு வந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், Vozhinha விளையாடுன இந்த கால்பந்து போட்டி தான் அவரோட முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி. Vozhinha-க்கு மட்டும் இல்லை, அவர் விளையாடிய Cape Verde நாட்டோட கால்பந்து அணிக்கே இதுதான் முதல் உலகக்கோப்பை போட்டி. அறிமுகமான முதல் படம் Blockbuster ஆகுற மாதிரி, முதல்முறையா நின்ன தேர்தல்லையே ஜெயிச்ச மாதிரி ஒரு வரலாற்று சாதனையை படைச்சிருக்காரு Vozhinha-வும் அவரோட Cape Verde கால்பந்து அணியும்.
இந்த சாதனையை Vozhinha சாதாரணமாக நிகழ்த்தவில்லை. தொழில்முறை கால்பந்து வீரரான அவர் தன்னோட கேரியரை தொடங்கியபோது அவருக்கு 25 வயது. இப்போது 40 வயது. நம்மூரில் நடைபெறும் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகள் மாதிரி போர்ச்சுகல் நாட்டில் நடந்த சிறிய அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சு இன்று FIFA உலகக்கோப்பையில், மிகப்பெரிய பாரம்பரியமிக்க அணியான ஸ்பெயின் நாட்டுக்கே சிம்ம சொப்பனமா மாறி உலக கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனா மாறியிருக்காரு Vozhinha. ஸ்பெயின் உடனான போட்டியில் அவர் செஞ்ச சம்பவம் அவருக்கு சர்வதேச அளவுல புகழ தேடி தந்திருக்கு. 40000 ஃபாளோயர்ஸ் மட்டுமே இருந்த அவரோட இன்ஸ்டா ID-ல இப்போ ஃபாளோயர்ஸ் கவுண்ட் 6 மில்லியனா அதிகரித்துள்ளது. மேலும் போட்டி முடிந்தவுடன் ஊடகம் முன் அவர் அளித்த பேட்டிதான், இப்போது உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. Vozhinha, தான் கடந்து வந்த பாதை, தான் பட்ட கஷ்டங்களை பத்தி கண்கலங்கி பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. Vozhinha பிறந்த நாடான Cape Verde மக்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடிட்டு இருக்காங்க.