விளையாட்டு

FIDE செஸ் சாம்பியன்ஷிப்- தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

உங்களது வெற்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும்.

FIDE உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்," செஸ் வீராங்கனைகளின் வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். செஸ் வீராங்கனைகள் வருங்காலங்களில் பல சாதனைகள் படைத்து நாட்டுக்கு பெருமை தேடித்தர வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கும், இப்போட்டியில் 3-ம்இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகி யோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT