விளையாட்டு

400 மீட்டர் தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்த நெதர்லாந்து வீராங்கனை

உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை அவர் முறியடித்தார்.49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.

மாலை மலர்

நெதர்லாந்தின் ஓட்டப்பந்தய வீராங்கனை ஃபெம்கே போல் நேற்று நடந்த உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை முறியடித்தார். அவர் 49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பு டச்சு சாம்பியன்ஷிப்பில் அவர் செய்த சாதனையை விட 0.07 முன்பே கடந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் நடந்த உலகப் போட்டிகளில் அவர் வென்ற 400 தடைகள பட்டத்தை தொடர்ந்து இன்டோர் பட்டமும் கிடைத்ததுள்ளது.

டீம்மேட் மற்றும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடுவரான பாட்னர் லீக் கிளேவர் 50.16-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டு டச்சு விளையாட்டு வீரர்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.